” கொற்றவனே கதிரவனும் கோணமேற
செப்பினேன் ஜென்மனுக்கு யோகம் மெத்த ”
என்று புலிப்பாணி சொன்னபடி
சூரியன் 5. 9ல் இருப்பினும் யோகபலனைத் தருவார் எனச் சொல்லி உள்ளது.
இது நடைமுறையில் செயல்படுவதாகும்.
இதே போல் சுக்கிரன் 1, 4, 5, 7, 9, 10 ல் இருந்து
அந்த வீட்டின் அதிபதி சுக்கிரனுக்கு நல்ல நிலையில் இருப்பின்
நல்ல யோகங்களை விர்த்தி செய்கிறார்.
லக்னாதிபதியான சுக்கிரன் 8க்குரிய ஆதிபத்திய தோஷம் செய்யார் என பல நூல்கள்
சொல்லி இருப்பினும், லக்கினாதிபதியான சுக்கிரன்திசை, திருவாதிரை, சுவாதி, சதயம்,
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் துலாலக்கினமாக
பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை வரும் போது மாரகம், கண்டம் தர இடம் உண்டு.
இக்காலம் மிருத்துஞ்ச ஹோமம் பயன்தரும்.

constellation illustration.