27 நட்சத்திரங்கள் அதன் அதிபதிகள் அது அமைந்திருக்கும் ராசிகள் முதலியவற்றை அறிந்து கொண்ட நாம் அடுத்ததாக 12 ராசிகளின் தன்மையைப் பற்றி சிறிது விரிவாக காண்போம் மேசம் :- “தகடோடு எகரேல்” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி. வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் ஆதியாய் இருப்பது ஆடு தலை உடைய ராசி மேஷம் ஆகும். இது உறுதியானது. துணிவு மிக்கது முரட்டு சுபாவம் மிக்கது. நிலையான பலமும் தூய நம்பிக்கையும் ஊட்டும் தன்மை மிக்கது. வடமுகராசிகளில் முதலாய் வருவது. விஷீஹ ரேகைக்குரிய ராசியில் முதலாவது நெருப்பு தன்மை உடைய ராசி அதனால் இயற்கையிலேயே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும் வைராக்கியமும் மிக்கது. இது வறண்ட ராசியாகும். எடுக்கும் முயற்சி சித்தியாவதில் அதிக அளவு பிராசையும் துன்பத்தையும் தரும். மலடான ராசியும் கூட அதிக சீற்றம் உடைய ராசி, எதையும் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் செய்து முடிப்பது, மிருகத் தன்மையுள்ள ராசி இது கால புருஷனின் தலை, முகத்தை குறிக்கிறது. குணத்தில் இது தமோ குணராசி, பிருஷ்டோதய ராசி எனவே இரவில் வீரியமிக்கது. இதில் வரும் முதல் 10 பாகை முதல் திரிகோணம் எனப்படும் தன்மை. ஆண் ஆயுதங்களை தாங்கிய வடிவம் அதிபதி செவ்வாய், இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரிகோணம் எனப்படும். ஆண் தன்மை ஆயுதங்களைத் தாங்கியதும் க்ருரமானதும் ஆகும். அதிபதி சூரியன் ஆகும். மூன்றாவது 10 பாகை மூன்றாவது திரிகோணம் எனப்படும் . அதிபதி குரு ஆகும். இதில் 1 பாகை இரண்டு மைலை குறிக்கும். இந்த இடத்தில் சூரியன் உச்சநிலை அடைகிறான். சனி நீச தன்மை அடைந்து வலிமை இழக்கிறான். சுக்கிரன், சந்திரன், புதன், சமம் என்ற அந்தஸ்தை அடைகிறது. குருவிற்கு நட்பு வீடாகவும் ராகு, கேதுவிற்கு பகைவீடும் ஆகும். இது கள்ளர் தங்குமிடம் குதிரை லாயம் மணல் அல்லது புல்தரை போன்ற இடங்களை குறிக்கும் இது சத்ரியராசி ஆகும். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaOctober 11, 2020Leave a commentTags: divine power athmaகோள்களின் கோலாட்டம்மேசம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ குரு கீதைNextNext post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் ரிஷபம் :-Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024