சந்திரனுக்கு 3 – க்குடையவர் உச்சமடைய, அந்த உச்ச ராசியில் நின்ற ராசியாதிபதி
5 – ல் நிற்க, புண்ணிய குணம் உடையவர்.
செவ்வாயும், 9 – க்குடையவரும் கூட 5 – ல் நிற்க ஆதாரம் உள்ளவர்.
3 – க்குடையவரை 2 – க்குடையவர் பார்க்க, லக்கினாதிபதி 2 – ல் நிற்க புதன் பார்க்க நாராயண பக்தி உடையவர்.
குரு லக்கினத்தில் நிற்க, அவரை 5, 2,9 – க்குடையவர்களால் 7 – இல் இருந்து பார்க்க, கீர்த்தி உடையவர்.
4 – ல் செவ்வாய் உச்சமடைந்து, குரு உச்சமடைந்து பார்க்க வீரம் பொருந்தியவர்.