லக்கினாதிபதியும் 9 – க்குரியவரும் கூடி 3 – ல், 6 – க்குரியவர் கேந்திரத்தில், சந்திரன் நீச்சம் அடைந்து,
சனி, ராகு சேர்க்கை பெற்றால் ஒரு காசும் இல்லாத தரித்திரன், துர்க்குணம் உடையவன்,
கையில் ஓடு எடுத்து திரிவான்.
பாவர்கள் லக்கினத்தை பார்க்க, 9 – க்குரியவர், 12 – ல், 12 – க்குரியவர் 4 – ல், 3 – க்குரியவர் பலம் குறைந்து
இருக்க, தாய், தந்தையின் பாவத்தை உருக்கொண்டு வந்தவன்.
வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெற முடியாமல் தவிப்பான். தீராத மன வேதனைகளை உடையவன்.
3 – ல், 8 – க்குடையவர், 8 – க்குரியவருக்கு முன், பின் குருவும், சுக்கிரனும் நிற்க,
சந்திரன், சுக்கிரனுக்கு 7 – ல் இருப்பின் ஆயுள் பலம் மிகுந்தவன். பல சுகங்களை அனுபவிப்பான்.
பலவகைத் தொழில்களில் நிபுணத்துவம் கிட்டும்.
தீர்க்காயுள் பெற்ற ஜாதகங்களின் கிரக அடைவை பார்க்கலாம். 3 – ல் சனி, லக்கினத்தில் சந்திரன், 11 – ல் சுபர்கள்,
குரு திரிகோணத்தில், இருந்தாலும். குரு கேந்திரம் அடைந்து,
குருவிற்கு திரிகோணத்தில் லக்கினாதிபதி நிற்கவும். தீர்க்காயுள் பெற்ற ஜாதகம்.