46) லக்கினாதிபதி 5 – க்குரியவருடனோ, அல்லது சந்திரனோடு சேர்ந்து,
நீச்ச அஸ்தமனம் வக்கிரம் பெற்றிருந்தால் தெளிவில்லாத மன நிலை,
தேவை இல்லாத அச்சம், மனபயம் கோழைத்தனம், பலஹீனமான மனதுடையவர்
47) 9 – ஆமிடத்தில் 2, 3 – க்குரியோர் இருந்து, 2 – ல் இருந்து 5 – க்குரியவர் இருக்க
லக்கினத்தில் சுபக்கிரகமிருந்தால், கல்வி, புகழ் , செல்வம்,உடையவர்.
48) லக்கினாதிபதி சுபர் இருக்க, 5 – க்குரியவர் பலம் பெற்று, 2 – க்குரியவரின் தொடர்பை பெற்றால்
தான தருமம் மிக்கவன். வசதி வாய்ப்புகள் கிட்டும்.
49) 5, 10 – க்குரியவர் கூடி சனிக்கு 3 – ல் நிற்க கொடை உள்ளம் உடையவர்.
வசதி மிக்கவர், தெய்வ பலம் உடையவர்.
50) 3, 5, 9 – க்குரியவர், புதனுடன் கூடி கேந்திரத்தில் நிற்க,
குறை இல்லா சுகம் பெறுவர்.
வாழ்க்கையில் உன்ன நிலையை அடைவர். விஷ்ணு அம்சம் பெறுவர்.