36) 1 – ல் ராகு, 3, 6 – க்குரியவர் சாரம் பெற்று, செவ்வாய், சனியின் தொடர்பை பெற்றால்,
அக்கிரக திசாபுத்தி காலங்கள் தொழிலை பங்கப்படுத்தும். சொல்ல முடியாத இடையூறுகளைத் தரும்.
37) 1 – ல் லக்கினாதிபதி 3, 6 – க்குரியவர் சாரம் பெற்று, 8 – க்குரியவரின் தொடர்பை பெற்ற
சூரியன் சேர்ந்திருப்பின், ஜாதகர் பிறக்கும்போதே நோயுடன் பிறக்கிறார்.
வினோதமான நோய்களை வெளிக்காட்டி பெரும் மருத்துவர்களையே திக்குமுக்காட வைக்கும்.
38) லக்கினத்தில பாவர், 8 – க்குரியவர் சாரம் பெற்று லக்கினாதிபதி மறைந்து
பாவரால் பார்க்கப்பட்டால், வீட்டிற்கு அடங்காதவன். கல்வி பலம் குறைந்தவன் .
ஈன வார்த்தைகள் பேசுவோன். சஞ்சாராமான வாழ்க்கை அமையும்.
39) வக்கிரம் பெற்ற குரு, 5 – லிருந்து, லக்கினாதிபதியுடன் இணைய
புத்திரர்களால் பலவிதமான வருத்தங்கள் ஏற்படும்.
40) எந்த ஜாதகத்திலும், லக்கின, நவாம்ச லக்கினத்திற்கு இருபுறமும் பாவக்கிரகங்கள் இருந்தால்,
கத்திரியோகம், அந்த ஜாதகன் உயர்ந்த நிலையில் இருந்தாலும்
பிற்கால நிலை கெட்டுவிடும். ஊரை விட்டு ஓடிப்போய்
பசி பட்டினியால், வியாதியால் கஷ்டப்படுவான். சிலருக்கு சிறை வாழ்வும் கிடைக்கிறது.