26) 1 – க்குரியவர் 12 – க்குரியவர் சாரம் பெற்று, 6 – க்குரியவர் தொடர்பு பெற்றால்,
1 – க்குரியவர், 7 – க்குரியவர் சனி, புதன் தொடர்பு பெற்றால்
நோய்த் தொல்லைகளுக்கு அடிமையாவான் மத்திம வயதில் வாதம் ஏற்பட்டு
நரம்புத் தொல்லையால் உடல் உனமாகும்.
27) லக்கினாதிபதி பாவர் சாரம் பெற்று, உடலாதிபதி நீச்ச பரிவர்த்தனை பெற்று
ரோகாதிபதி, புதனுடன் தொடர்பு பெற்றால் உஷ்ள நீர் சம்பந்தப்பட்ட வியாதிகளால் உடம்பு தளரும்.
நரம்பு பலகீனத்தால் உடல் கெடும்.
28) 1 – க்குரியவருடன், 6, 8 – க்குரியவர் தொடர்பு பெற்றால்
இவர்கள் தசாபுத்தி காலத்தில் தன் செயல்களாலே கடன் ஏற்பட்டு விடும்.
29) லக்கினாதிபதி 8 – ல் ராகு சாரம் பெற்று, 5, 10 – க்குரியவர் பலம் இழந்து
3, 9 – ல் ராகு, கேது இருப்பின் தன் உழைப்பை குடும்பத்திற்கே தியாகம் செய்வான்.
உடன் பிறப்புகளுக்கு தந்தையாக இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துவான்.
30) லக்கினாதிபதி ராக சாரம் பெற்று, 5, 8 – க்குரியவரின் தொடர்பு பெற்று
பாதகாதிபதியின் சம்பந்தம் கிட்டி கேந்திரத்திலிருந்தால்
ஜெயில் வாசம் ஏற்படும். கிரிமினல் வழக்கால் தொல்லை. எமாற்று வேலை செய்வான்.