யவன காவியம் – தாண்டவமாலை – கார்க்ய நாடி – ஜோதிட சாகரம் –
சந்திர கலா நாடி – சந்திர காவியம் – குமாரசுவாமியம் போன்ற
பல சிறப்பான நூல்களில் சொல்லியுள்ள விஷயங்களைத் தொகுத்து
அனுபவ ஆராய்ச்சி மூலம் நடைமுறையில் கண்ட
எனது 20 ஆண்டு கால ஜோதிட ஆராய்ச்சியின் வாயிலாக
இதனை உங்கள் முன் படைக்கிறேன்.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு
மேஷ லக்கினத்திற்குரவி பொன்னல்லர் மிகவும்
யோககாராங் கூடியேயிரக்கிற்..பிரபல யோகங்
கொடுப்பர்மால் கவிசனி தீயோர்
மாடுறுகவியோடு கொன்றிடான் சனி மால்
மாரகத் தானமாமிரண்டு
பாடுறு மூன்றே ழெட்டிறுதியினும்
பரிவுறிறகண்ட மென்றுரையே ( யவன காவியம் )
“மந்தனொடு மால்கங்கன் மாபாவி நல்லவர்கள்
கொந்தலர் பூங்கோதாய் குருவிரவி – சந்ததமும்
தீயபலன் காரியடுதேவபிரான் சேர்ந்தக்கால்
ஈயுமவனோடொற்றதே.”
“மாரகத்தானப் பதியா மண்ணுகின்ற பார்க்க வனும்
மாரகத்தைச் செய்யானெம் மானவர்க்கும் – மாரகத்தை செய்வார்
சனி முன்னோர் செவ்விய மேடம் பிறந்தோர்க்
கிவ்வாறுரைப்பீரிருந்து ” ( தாண்டவ மாலை )
“தானுறு மேடத்தார்க்குச் சனிபுகர் புந்திபாவர்
வானுறும் பரிதிதேவ வான்குரு சுபனாம் என்றே
கானுறு மிவர்கள் கூடி கடினமாம் பலன்களற்பம்
தேனுறுஞ் சுக்கிரயன்றன் திசையிற்றான் மாரங்கள் ” ( ஜாதக அலங்காரம் )
“மேன் மேட லக்கினத்தைமேவிப் பிறக்கிலிருந்து
பண்புகர் மாலும் சனியும் பாவி ” ( சந்திர காவியம் )
“சூடப்பா சரராசி ஜெனித்த பேர்க்கு
சுகமில்லை லாபாதிபதியினாலே
ஆடப்பா அகம் பொருளும் நிலமும் சேதம்
அப்பனே அரசரிட தோஷமுண்டாம்
தேடப்பாதிர வியமு மளித்தர தேடமாட்டான்
வீடப்பா தோனித்திலிருக்க நன்று
விளம்பினேன் புலிப்பாணி வினைவைப்பாரே ( புலிப்பாணி )
இப்படி பல நூல்களில் பல வகையான கருத்துக்களை சொல்லுகிறார்கள்.
நடைமுறையில் பார்க்கும் போது மேலே சொல்லப் பட்ட,
பாடல்களுக்கு ஒப்ப 75 % நடைமுறைக்கு வருகிறது.
ஒரு சில விஷயங்களில் மாறுபாடு தெரிகிறது.
இது நமது நடைமுறை அனுபவ – ஆராய்ச்சிக்கு ஒப்ப
நாம் தெளிவுபடுத்திக் கொண்டோமானால் மிகவும் சிறப்புடையதாக இருக்கும்.