ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் சோதிடம் எங்கு எப்படி தோன்றியது என்பது பற்றி எவருக்கும் தெரியாது ஆனால், சீனர்கள், இந்துக்கள், சால்தியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர், ரோமானியர், அரேபியர் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு முறைகளை கையாண்டு வந்தனர் என்பது அறிந்த உண்மை. இக்கலை ஒரு பழங்கால கலை அது விதியையும் எதிர் காலத்தையும் வானத்தில் உள்ள கோள்களின் இருப்பின்படி முன் கூட்டித் தெரிவிக்கும் ஒரு விஞ்ஞானக்கலை. ” வேதயஸ்யசஷ ¨ ஜ்யோதிஷம் ஜயோதிஷம் ஜகதாய சக்ஷ ¨ ” இத்தகைய சிறப்புடைய ஜோதிஸ சாஸ்திரம் கி.மு.4000 – க்கு முன்னதாக ரிக்வேதத்திலேயே மிக சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. இதையே யஜூர் வேதம் சற்று தெளிவாக்குகிறது. காடகம் முதல் ப்ரஸனமே, திதி நிர்ணயம் முகூர்த்தம் பற்றி கூறுகிறது. ஒரு செயலுக்குரிய நாயகர்கள் அவர்கள் தேவராயினும், அசுரராயினும், மனிதர்கள் ஆயினும் அவர்களின் தவம், செயல், பிறப்பிற்கு காரணம் அவற்றிற்குரிய மூலாதாரம் என்ன என்பதை தரம் பிரித்து காட்டுவது சோதிட சாஸ்திரம். கி.பி. 493 – ல் ஆரியபட்டர் எழுதியது ஆர்ய விருத்தம், இவர் பூமியின் உருவம் பற்றிய ஆகர்ஸன சக்தி நுட்பமான 14 விசயங்களை எழுதினார். கி.பி. 505 – ல் லவதேவர், கி.பி. 550 – ல் வாராஹமிகிரர். கி.பி. 500 – 628 இடைப்பட்ட காலம் மகாபாஸ்கரீயம் எழுதியவர், பாஸ்கராசாரியார் 628 பிரம்மகுப்தா 748 முதல் பாஸ்கரா லாலா, 502 -வது, ஆர்ய பட்டர் 1039 – ல் ஸ்ரீபதி. 1114 – ல் 2 – வது பாஸ்கரர், 1430 – ல், திருக்கணிதம் நடைமுறைக்கு வந்தது. லீலாவதி வியாக்னாம். கி.மு. 4000 – க்கு முன்பாகவே பல முனிவர்கள், சித்தர்கள், மகரிஷிகள் கையாண்டு வந்த ஜோதிஸ சாஸ்திரம் பெருகி வந்தது என பெரியோர்கள் மூலம் அறிகிறோம். ஜோதிட சாஸ்திரம் வகை :- கணித ஸ்கந்தம். ஜாதக ஸ்கந்தம். சங்கீதா ஸ்கந்தம். இதில் கணித ஸ்கந்தம், 2 விதம், 1. பங்சாங்க கணணம், அல்லது சார கணணம். 2. ஜாதக கணணம் அல்லது ஸ்புட கணணம். ஜாதக ஸ்கந்தம் : கிரகங்களைப் பற்றிய பலா பலன்களையும் அவற்றை கணிக்கும் முறையையும் பிறவற்றையும் கூறும். சங்கீதா ஸ்கந்தம் : கிரகங்களின் தன்மை அதன் பலா பலன் நிர்ணய பாடல்களைக் கூறும். கோள்களின் நான்கு வகை :- மண்டல கிரகங்கள்: சூரியன் — சந்திரன். தாரா கிரகங்கள் : செவ்வாய் — புதன் — சுக் — குரு — சனி. சாயா கிரகங்கள் : ராகு — கேது. உப கிரகங்கள் : நவக்கிரகங்களின் புத்திரர் Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaAugust 13, 2020Leave a commentTags: divine power athmaஜோதிட கலை பற்றி சில விஷயங்கள்மண்டல கிரகங்கள் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஜோதிடர் அமரும் திசைNextNext post:அர்த்த சாஸ்திரம் உரைக்கும் அர்த்தமுள்ள அறிவுரைகள்..!Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024