விருச்சிகம்:- “தேளானைப் பேணி கொள்” என்ற இந்த ராசி, வான மண்டலத்தில் தேளைப் போன்ற அமைப்பை உடையது இந்த ராசியாகும். இது கால புருஷனின் தர்ம ஸ்தானங்களை குறிப்பிடுகிறது. இது 210 டிகிரி பாகை முதல் 240 பாகை வரை பரவியுள்ள ராசியாகும். இது தென் முகராசிகளில் இரண்டாவது ராசியாகும். இதன் அதிபதி செவ்வாய், பெண் ராசி அதாவது இரட்டை ராசி என்ற பெயரும் கொண்டது. ஸ்திர ராசி அதிக சீற்றமுள்ள ராசி எனவே மிகத் துணிவும் மிகுந்த தன் நம்பிக்கையும், போர் குணமும் எதற்கும் கலங்காத தன்மையும் கொண்டது. நீர் தன்மையுடைய ராசி அதனால் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆலோசனை உடையதும் கற்பனையும் உணர்ச்சி மிக்கதும் ஆகும். பயனுள்ள ராசி எக்காரியங்களிலும் சித்தி அளிப்பது, தென்முக ராசிகளில் மூன்றாவது, இது மௌனமான ராசியும் கூட இந்த பாகத்தில் சந்திரன் நீச்சம் அடைகிறது. செவ்வாயின் ஆட்சி வீடு ரஜோ குணமுடையது. இந்த ராசி குரு சூரியன் நட்பு, சுக்கிரன், புதன் சமம் கேது உச்சம் சனி பகை என்னும் அமைப்பை பெறுகிறது. இது வடதிசையை குறிக்கிறது. முதல் 10 பாகையாகிய முதல் திரிகோணம் பெண் தன்மை உடையது பாம்பினம் செவ்வாய் உடையது. இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரிகோணம் பெண் தன்மை பாம்பினம் குருவின் ஆதிபத்தியத்தில் வருவது. மூன்றாவது 10 பாகை மூன்றாவது திரிகோணம் ஆண் தன்மை கொண்டது ஆமை முகமும் சிங்க உருவமும் கொண்டது. அதிபதி சந்திரன் 1 பாகை 2 பர்லாங்கை குறிக்கும். வாய்க்கால்கள், குளிக்கும் அறை, சேற்று நிலபகுதிகள், குளிக்கும் தொட்டிகள், சலவை செய்யும் இடம் முதலியவற்றை குறிக்கும். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaOctober 22, 2020Leave a commentTags: கோள்களின் கோலாட்டம்விருச்சிகம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோணாசனம் — KONASANAMNextNext post:உட்டியானா – UDDIYANARelated Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 18March 20, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 17February 20, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 16February 19, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 15February 18, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 14February 17, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 13February 16, 2025