சிம்மம்:- “சிங்கத்தானோடு செருஏரேல்” என்ற இந்த ராசி. சிங்கத்தின் உருவை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ராசியானது, கால புருஷனின் 5 வது ராசியாகும். வானவெளியில் 120 பாகை முதல் 150 வரை வியாபித்துள்ளது . ஸ்திர ராசி, ஒற்றை ராசி எனப்படும். ஆண் ராசி, எனவே அதிக அளவு துணிவும் தலைமை பதவி வெறியும் எவருக்கும் அடங்காத தன்மையும் அடக்க வேண்டும் என்கிற சர்வாதிகள் போக்கும் கம்பீரமும் மிக்கது. வட, முக ராசிகளில் 5 வது இதன் அதிபதி உலகு உயிர்க்கெல்லாம் ஒளி வழங்கும்ஆத்ம நாயகன் சூரிய பகவான் ஆவார். இது சிரோதய ராசி எனவே பகலில் பலம் மிக்கது. இது நெருப்புத் தன்மை உடைய ராசி எனவே அதிக பிரயாசையும் கடின உழைப்பும் கொண்ட இது சாரமில்லாதது முதல் பத்து பாகை முதல் திரிகோணம் ஆகும். ஆண் தன்மை உடையது பறவை இனம் அதிபதி சூரியன். இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரிகோணம் ஆண் தன்மை உடையது. ஆயுதமுடையது அதிபதி குரு. மூன்றாவது 10 பாகை மூன்றாவது திரிகோணம் ஆண் தன்மை உடையது நாற்கால் ஜீவன் ஆயுதமுடையது அதிபர் செவ்வாய். இந்த ராசியில் எந்த ஒரு கிரகமும் உச்சமோ, நீச்சமோ அடைவதில்லை. சூரியனின் ஆட்சி விடாகிய இது சந்திரன், செவ்வாய், குரு இவர்களுக்கு நட்பு வீடாகவும் சனி, சுக்கிரன், புதன், ராகு, கேதுக்கு பகை வீடாகவும் அமைகிறது. இந்த ராசி கிழக்கை குறிக்கிறது. ராஜகுணத்தை உடைய இதை உலகில் உள்ள அனைவராலும் விரும்பப்படும் அமைப்பை கொண்டது, இதில் 1 பாகை, 2 பர்லாங்கை குறிக்கும். சிரோதய ராசி பகலில் பலம் மிக்கது. காடு பாலைவனம் கற்பாறை கோட்டை அடுப்புகள் முதலியவற்றை குறிக்கும். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaOctober 15, 2020Leave a commentTags: divine power athmaகோள்களின் கோலாட்டம்சிம்மம்.சூரியன் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் கடகம் :-NextNext post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் கன்னி:Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024