ரிஷபம் :-
“ரிடபத்தானோடு தோரேல் ” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி.
காளை மாட்டின் உருவத்தை ஒத்த இந்த ராசியான மண்டலத்தில்
30 டிகிரி பாகை முதல் 60 பாகை வரை வியாபித்து
இரண்டாவதாக அமைந்திருக்கும் ராசியாகும்.
இதன் அதிபதி சுக்கிரன்.
இது பெண் தன்மையுள்ளது.
சாத்திய ராசி, சமராசி ஸ்திர ராசியும் கூட எனவே இது அமைதியானது.
ஆர்பாட்டம் செய்ய ஆசைப்பட்டாலும், செய்ய துணிவில்லாதது
அதிக சுய இரக்கமும் சுய பச்சாதாபமும் மிக்கது
வட முக ராசிகளில் இரண்டாவதாய் வருவது
மண் தன்மை உடைய ராசி
எனவே சிந்தனை எல்லாம் லோகாதாய வாழ்க்கையைப் பற்றியே இருக்கும்.
சுய பாதுகாப்பும் மெதுவானதும் சிக்கனமானதும் ஆகும்.
நிர்வாக பலமும் ஆற்றிலில் ஊக்கமும்,
அமைதியும் கை தேர்ச்சியான பண்பும் உடையது.
அரை பயனுள்ள ராசி
முயற்சிக்கு அடுத்தவர் ஆதரவும்
அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் மனோ நிலையும்
அதற்கு தகுந்த அமைப்பும் கிடைக்கும் ராசியாகும்.
மிருகத் தன்மையுள்ள ராசி
இது கால புருஷனின் கழுத்தை குறிக்கிறது.
இதன் திசை தெற்கு ஆகும்
ராஜகுணம் உடையது
பிருஷ்யோத ராசி இரவில் அதிக வீரியமிக்கது.
இதில் முதல் 10 பாகை முதல் திரேக்காணம்,
தன்மை பெண் குணம் கொடியது அதிபதி சுக்கிரன்.
இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரேக்காணம்
தன்மை ஆண் குணம் நாற்கால் ஜீவன் அதிபதி புதன்.
மூன்றாவது 10 பாகை மூன்றாவது திரேக்காணம்,
தன்மை ஆண் குணம் நாற்கால் ஜீவன் இது சனியின் உடையது.
1பாகை இரண்டு பர்லாங்கை குறிக்கும்.
இங்கு சந்திரன் உச்ச சந்தஸ்தை அடைகிறது.
ராகு நீச்சம் அடைகிறது.
சூரியன் பகை பெறுகிறது. செவ்வாய் சமம்,
புதன் நட்பு வீடாக அமைகிறது.
மாடுகள், ஆடுகள் அடைத்து வைக்கும் இடம்.
விவசாய நிலம்
தரை மரச்சாமான்களை குறிக்கும்.
இது வைசிய ராசி ஆகும்.