அணிந்துரை R.P சாமி
“கோள்களின் கோலாட்டம்” என்ற இந்நூல் ஓர் ஒப்பற்ற அரிய ஆய்வு நூலாகும்.
இந்நூலாசிரியர் ஸ்ரீ-ல-ஸ்ரீ மகரிஷி அவர்கள் சிறந்த வாசியோகியாகவும், தலைசிறந்த சோதிட வல்லுநரும் ஆவர்.
பிரம்மரிஷி சோதிஷ ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும்,
”ஞான சிந்தாமணி” மாத இதழின் ஆசிரியராகவும் இருந்து
நாட்டிற்கு பெரும் தொண்டாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
கால் நூற்றாண்டுக்கு மேலாக அவருடன் ” நந்தி சோதிடம்” மாத இதழ் வந்து கொண்டிருந்த காலத்திற்கு முன்பிருந்தே
இணைந்து நின்று சோதிடகலைக்கு தொண்டாற்றியவன் என்ற முறையில்
அவரின் வல்லமை எனக்கு நன்கு தெரியும்.
சென்ற ஆண்டில் 1993ல் எனக்கு ”தமிழறிஞர்” பட்டம் அரசால் அளிக்கப்பட்டது.
கோள் நிலை கொண்டு அதனை எனக்கு முன்பே தேதியும், நேரத்தையும் குறிப்பிட்டுக் கூறிய அருளாளர்,
அவர்களின் வாக்கிலே இருக்கலாம், நடக்கலாம் என்ற சந்தேகச் சொல்லே வராது.
அவர் சொல் நடக்கும்-நடக்காது என்ற முடிந்த முடிவாகவேயிருக்கும்.
அத்தகைய மேதையால் ஆக்கப்பட்ட இந்நூல் மிகவும் புதிய முடிந்த ஆய்வாகும்.
உதாரணமாக கோச்சாரத்தில் ஒரு கிரகம் சஞ்சரிக்கும் போது
அது நின்ற நக்ஷத்திரத்திற்கு எதிரிடை நக்ஷத்திரம் ஜென்ம நக்ஷத்திரமாகி
அது சமயம் ஜென்ம நக்ஷத்திரத்தில் சந்திரன் பிரவேசித்தால்
கிரகம் நின்று சஞ்சரிக்கும் அப்பாவத்தால் ஜாதகனுக்கு மனக்கலக்கம், துன்பம் ஏற்படும் என்று கூறுகிறார்.
இது அனுபவ பூர்வமான உண்மை என்பதை ஆராய்ந்து பார்த்தால், தெரிந்து கொள்ள முடியும்.
இது போன்று வேறு எந்த கிரந்தங்களிலும் கூறப்படாத சிறந்த உண்மை கருத்தினை எடுத்துக் கூறுகிறார்கள்.
இந்நூல் கிடைத்தற்கரிய ஓர் ஒப்பற்ற சோதிட நூல்.
இந்நூலை படித்து அன்பர்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இந்நூல் ஆக்கிய ஸ்ரீ-ல-ஸ்ரீ மகரிஷி அவர்களுக்கு எனது பாராட்டுதலை தலைவணங்கி தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புள்ள
ஆர்.பி.சாமி