சுக்கிரனும், புதனும் 2 – ல் நிற்க, குரு பார்க்க கல்விமான்.
சந்திரன், சுக்கிரன், புதன் மூவரும் கூடி 4 – ல் நிற்க, குரு பார்க்க கல்விமான்.
2, 3, 4, 5, 7, 9, 10 இதற்குடையவர்கள் சுபர்களாயிருந்து ஆட்சி பெற்று நிற்க கல்விமான்.
சூரியனை 2 – க்குடையவர் பார்க்க, செவ்வாயை குரு பார்க்க நூல்களை கற்றவர். தமிழ்ப்புலவர்.
புதனை லக்கினாதிபதி பார்க்க, சனி நட்புடன் இருக்க தமிழ் புலவர்.
சுக்கிரன் உபய ராசியில் நிற்க அவருக்கு நேரில் சந்திரன், குரு நிற்க மேற்படி பலன்.