இதில் வரும் கருத்துக்கள் மத்திய அரசின் சார்பில்
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை,
புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம், வெரோ செல்களை தயாரிப்பதற்கும்,
வளர்ப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
வளர்ந்த வெரோ செல்கள் தண்ணீரிலும், ரசாயண திரவங்களிலும் கழுவப்படுகிறது.
அதனால், கன்றுக் குட்டியின் சீரம் முழுவதும் போய்விடுகிறது.
அதன்பின் வைரஸ் வளர்ச்சிக்காக வெரோ செல்கள்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறது.
வைரஸ் வளர்ந்தபின் வெரோ செல்கள் முழுமையாக அழிக்கப்படுகிறது.
அதன்பின் வைரசும் அழிக்கப்படுகிறது.
(செயலிலக்கம் செய்யப்படுகிறது ) பின் சுத்தம் செய்யப்படுகிறது.
அதன் பின் செயலிலக்கம் செய்யப்பட்ட வைரஸ் தடுப்பூசி தயாரித்து பணிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
( இதைத் தவிர எருது மற்றும் பிற விலங்குகளிடம் இருந்து வரும் சீரம் வெரோ செல்
வளர்ச்சிக்காக உலகெங்கிலும் வெகு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தொழில் நுட்பம் போலியோ, வெறி நாய்கடி, ப்பூளூ காய்ச்சல்
போன்ற அரிய வகை நோய்களுக்கு உண்டான தடுப்பூசி தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது ).