Skip to content
குதபாத ஆசனம்
You are here:
- Home
- யோகா
- குதபாத ஆசனம்
.
குதபாத ஆசனம் ( குருவாய் ) படத்திலுள்ளபடி
இரண்டு பாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து
ஆசனவாயின் பக்கத்தில் சேர்த்து இரண்டு கைகளையும்
இடுப்புக்கு நேராகக் கீழே ஊன்றிச் சைக்கிள் சீட்டின் மேல்
அமருவதுபோல் இரண்டு பாதங்கள் மேல் உட்கார வேண்டும்.
பிருஷ்ட பாகம் பூமியில் படக்கூடாது. இரு கைகளையும்
இரண்டு முழங்காலின் மேல் சின் முத்திரையுடன்
வைத்து 3 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை செய்ய வேண்டும்.
சாதாரணமாக மூச்சை இழுத்துவிட வேண்டும்.
குறிப்பு — புத்திர உற்பத்திக்குச் சிறந்த ஆசனம்.
ஆண், பெண் இருவரும் செய்ய வேண்டும்.
மூன்று மாதம் காலை, மாலை இரண்டு வேளையும்
செய்து வந்தால் நிச்சயம் கர்ப்பந்தரித்து புத்திர உற்பத்தி உண்டாகும்.
பலன்கள் — கணுக்கால், கெண்டைக்கால்,
விந்துப்பை ஆகியவற்றுக்குப் பலம் உண்டாகும்.
மலட்டுத்தன்மை நீங்கும். மூலம் பவுத்திரம்,
யானைக்கால் முதலிய நோய்கள் உண்டாகாது.
Go to Top
Informative