*ரிஷப கீதை* – உலக நன்மைக்காக நித்ய சத்தியங்கள் மற்றும் விடுதலைக்கான வழி குறித்து
ரிஷப முனிவர் தனது குழந்தைகளுக்கு அறிவுறுத்தியது.
இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
மனித வாழ்வின் நோக்கத்தையும், மனதின் மாறுபாடுகளை அகற்றிவைத்து,
சுயத்தை பற்றுகளிலிருந்து விடுவித்து
விடுதலையை அடைவது எப்படி என்பதை மனிதகுலத்திற்குக் கற்பிக்கிறது.
*சௌனக கீதை* – பிரபஞ்ச உயிரினங்களின் பொது வாழ்வின் ரகசியங்கள் குறித்து
யுதிஷ்டிரருக்கு சௌனக முனிவர் அறிவுறுத்தியது.
இது மஹாபாரதத்தின் ஆரண்ய பர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ருதி கீதை* – ஸ்ருதிகள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கி செய்த ப்ராத்தனை.
ஸ்ரீமத் பாகவதத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.
*யூகல கீதை* – ஸ்ரீ கிருஷ்ணனின் மகத்துவத்தை கோபியர்கள் விளக்குவது.
இது ஸ்ரீமத் பாகவதத்தில் இடம்பெறுகிறது.
