ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் எந்த நட்சத்திரத்தை பெற்றுள்ளதோ
அந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணி பார்க்கும்போது
எதிரிடையான நட்சத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஜென்ம நட்சத்திரம் அமையுமானால்
ஜாதகருக்கு செவ்வாயால் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது.
செவ்வாயின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்னம் அமைவது
அந்த ஜாதகரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் அமையாது.
செவ்வாய் அவரவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு அதிபதியாய் நிற்கின்றதோ
அந்த பாவாதிபதி செவ்வாயின் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால்
அந்த பாவத்திற்கு செவ்வாய் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் கிடைக்காது.