காலத்தின் தன்மையை தெரிந்து புரிந்து கொள்,
காலமே எல்லாம் அதாவது காலமே உன் உயிர்
அதை உனக்கோ அல்லது அடுத்தவருக்கோ உபயோகப்படுத்தாமல் நீ வீணாக்கினால்
உன்னையே நீ கொலை செய்தவன் ஆகிறாய்.
காலம் விலை மதிப்பில்லாதது, அதை வீணாக்கி விட்டுவிட்டால்
நாம் என்ன செய்தாலும் அதை பிடிக்க முடியாது.
வீணாக்கிவிட்டு அழுது புரண்டு அரற்றினாலும் சென்ற காலம் சென்றது தான்
நம்மாள் அதை பிடிக்க முடியாது.
அதனால்தான், பெரியவர்கள் நமக்கு சொல்லி கொடுத்தார்கள்
காலத்தே பயிர் செய்,
காலம் பொன் போன்றது
என்றெல்லாம்