காசி மாநகரில் திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள்
அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து
தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.
அசிதாங்க பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார்.
இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார்.
அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர்.
நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக
அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள்.
இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.