அருணன்
காசியப முனிவரின் மனைவி விநதை,
இரண்டு பிள்ளைகளை பிரசவித்தாள்.
முதல் பிள்ளை அருணன்,
இரண்டாவது பிள்ளை கருடன்,
சூரிய பகவானை வழிபட்ட அருணன்,
அவரது தேரை செலுத்தும் சாரதியாகும்
பேறு பெற்றார். காசி திரிலோசனர் கோவிலில்
அருணன் வழிபாடு செய்த சூரிய பகவான்
‘அருணாதித்யர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.