மயூகாதித்யர்
கங்கைக்கரையில் உள்ள பஞ்ச கங்கா காட் அருகில்
மயூகாதித்யர் என்னும் சூரியக்கோவில் உள்ளது.
புராண காலத்தில் சூரியன் இங்கு கபஸ்தீஸ்வரர், மங்களகவுரி என்னும் பெயரில்
சிவ – பார்வதியை பிரதிஷ்டை செய்து
லட்சம் ஆண்டுகள் தவமிருந்து வழிபட்டார்.
மனம் இரங்கிய சிவன்,
சூரியனுக்கு ‘மயூகன்’ ( என்றும் அழியாதவன் ) என்று பெயர் சூட்டினார்.
காசிக்கு சென்றால், காசி விஸ்வநாதரை தரிசிப்பதோடு
அங்குள்ள சூரியக் கோவில்களையும் வழிபட்டால் சகல நலமும் பெறலாம்.