இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
எளிமையாக செய்யும் முத்திரை ஆகும்.
வலதுகை விரல்கள் நுனியும்
இடதுகை விரல்கள் நுனியும்
ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.
ஒவ்வொரு விரலுக்கும் இடையில் ஒன்றை ஒன்று தொடதவாறு இடைவெளி இருக்க வேண்டும்.
பலன்கள் :-
ஒரு செயலில் ஈடுபடும்போது அந்த செயலில் மனம் ஒன்றாமல் தடுமாற்றம் ஏற்ப்பட்டால்
ஒரு பத்து நிமிடம் இந்த முத்திரையை செய்தால் போதும்
மனம் ஒறுமுகப்பட்டு செயலில் நன்றாக ஈடுபாடு செலுத்த முடியும்.
ஆசிரியர் பாடம் நடத்தும் போது இந்த முத்திரையை செய்தால்
மாணவர்கள் பாடத்திட்டத்தில் முழுக் கவனம் செலுத்த முடியும்.
சில விஷயங்களை மறந்துவிட்டு தவிக்கும் போது
இந்த முத்திரையை செய்தால்
உடனே மறந்து போனவை ஞாபகத்திற்கு வரும்.
இந்த முத்திரையை செய்யும் போது
மூளை செல்கள் அனைத்தும் நன்றாக தூண்டப்பட்டு
மூளையின் திறன் அதிகரிக்கும்.
ஞாபகமறதி உடையவர்கள் மன அழுத்தம் உடையவர்கள்
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் செய்வது நலம்.