கல்வி, வித்தை, பற்றி ஜோதிடம் நமக்கு எத்தனையோ விதிகளை கொடுத்திருக்கிறது.
அந்த விதிகள் அனைத்தும் நம்மால் கை கொள்ள முடியாது.
ஆனால்
அதில் சில விதிகளையாவது அனுஷ்டிக்கலாம்.
அப்படி செய்வது குழந்தைகளுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உபகாரமாகும்.
வித்யாரம்பம் என்று சொல்லப்படும் கல்வி கற்க ஆரம்பிக்கும் முதல் நாள்
திருவோணம், புனர்பூசம், பூசம், மிருகசீரிஷம், அவிட்டம், ஸ்வாதி, சதயம்,
அனுஷம், திருவாதிரை, அஸ்தம், சித்தரை நட்சத்திரங்கள் முதல் தரமானது.
அஸ்வினி, ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி இரண்டாம் தரமானது.
மற்ற நட்சத்திரங்கள் விலக்கப்பட வேண்டும்.
திவிதியை, திருதியை, பஞ்சமி, தசமி, ஏகாதசி முதல் தரமான திதிகள்.
வித்யாரம்ப விஷயத்தில் தேய்பிறையும், ஞாயிறு, செவ்வாய், சனி கிழமைகளை கட்டாயம் விலக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை: பெயில் ஆகி பெயில் ஆகி படிக்க வேண்டி வரும்.
செவ்வாய்: படிப்பை பாதியில் விட வேண்டி வரும்.
சனி: படிப்பதே சிரமமாக இருக்கும். படித்தது மறந்து போகும்.
வித்யாரம்பம் ஆரம்பிக்கும் லக்னத்திற்கு எட்டாமிடம் சுத்தி அவசியம்.
கூடவே 4-ம் இடமும் சுத்தியாய் இருந்தால் பெரிய விசேஷம்.
புதன்கிழமை-அஸ்த நட்சத்திரம் கூடிய நாளில்
சூரியன்-சந்திரன்-புதன் இவர்கள் புதனின் அம்ஸங்களான
மிதுனம் அல்லது கன்னியில் வித்யாரம்ப லக்னமாகவும் அமைய வேண்டும்.
குழந்தைகளை பள்ளிக்கு சேர்க்கும் பெற்றோர்
இந்த நேரத்தை பயன்படுத்தி
குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக இருப்பீர்களாக!