நமக்கும் இவ்வுலகிற்க்கும் இவ்வுலகம் போல் அல்லது
இதற்கும் மேற்பட்ட அண்ட பகிரண்டங்களையும் நாம் காண,
அறிய, புரிய, உள்ள ஒரே கருவி நமது மனம் மட்டுமே
உடல் பொறிகளும், புலன்களுடனேயே செயல்படும்.
ஆனால் மனம் இவைகள் இல்லாவிட்டாலும் செயல்படும்
மனோவேகம் நம்மாள் கணக்கிட முடியாத வேகமாகும்.
இந்த அளவு ஆற்றல் உள்ள மனதை புரிந்து
அதை நமக்கு பணியாளாகக்கொண்டால் நாம் அடைய விரும்பும்
அனைத்தையும் அடைய முடியும்.
நாம் ஏமாந்து அதற்கு அடிமையாகிவிட்டால்
நாம் அடைந்தது, அத்தனையும் இழந்து
கர்மாவின் பிடியில் சிக்கி சிதறுண்டு போவோம்.
இறைவனை போற்றவும் மனம் வேண்டும்
இறைவனை தூற்றவும் மனம் வேண்டும்.
I have realised it now after reading it.I sometimes don’t listen to my manam.thank you ayya