ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகிறார்கள்
கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராகஇல்லை.
பண்டைக் காலத்தில் நிலவி வந்த
வியப்பிற்குரிய பிரம்மசரிய முறை
இந்தநாளில் மறைந்து போனதுதான் இதற்கு காரணம்.
முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள்.
பிறகு கட்டளையிடும் பதவி
உனக்குத் தானாகவந்து சேரும்.
எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.
அதன்பின்பு எஜமானனாகும் தகுதி
உனக்கு வந்து சேரும்