கடவுள் தரிசனம் எப்படிப் பட்டது என்று உனக்குத் தெரியுமா?
அது குழந்தை கையிலிருக்கும் கற்கண்டைப் போன்றது.
சிலர் அதில் கொஞ்சம் கொடுக்கும்படி அதனிடம் கெஞ்சுவார்கள்.
ஆனால் அது அவர்கட்குக் கொடுக்கச் சற்றும் நினைப்பதில்லை.
ஆயினும் தான் விரும்புகின்ற வேறு ஒருவனது கையில்
வெகு சுலபமாக அக்குழந்தை அதைக் கொடுதுவிடுகிறது.
கடவுளின் தரிசனம் பெற வாழ்நாள் முழுவதும்
தவஞ்செய்யும் மனிதன் வெற்றி பெறுதில்லை.
ஆனால் எந்தவிதச் சிரமமுமின்றி மற்றொருவன் அதனைப் பெற்று விடுகிறான்.
அது கடவுளின் கருணையைப் பொறுத்தது.
அவன் யாரை விரும்புகின்றானோ
அவனிடம் கருணை காட்டுகிறான்.
இதில் கருணைதான் முக்கியம்.