சொல் அல்லது வார்த்தை என்பது என்ன?
சொல் என்பது அவரவர்களின் கடந்த காலமாகவும்,
ஞாபகமாகவும் இருக்கிறது.
அதாவது,
மகன் என்றால் எனது மகனையும் என் நண்பனின் மகனையும்
அவர் உறவுகளின் உள்ளவர்களையும்
என்னுடைய ஞாபகத்திற்க்கு கொண்டு வருகிறது
இது அனைத்தும் மனதிலிருந்தே உண்டாகிறது.
இப்படி மனதில் தோன்றும்
கடந்த கால எதிர் கால நினைவுகளை
பிறருக்கு வெளிப்படுத்த உபயோகப்படுவதே சொல்
இந்த சொல் எப்போதும் மிக அதிக அளவாக
கடந்த கால அல்லது எதிர்காலத்தில் மட்டுமே இருக்கும்
நிகழ் காலம் அதற்க்கு தெரிவது இல்லை
அதனாலேயே பெரியவர்கள்
பேசாமல் இரு
அமைதியாய் இரு
புரியும் என்றார்கள்