காந்த ஊசி எப்பொழுதும் வடக்கு திசையையே காட்டுவதால்,
கப்பல்கள் கடலில் திசை தப்பிப் போவதில்லை.
அதுபோலவே மனிதனுடைய மனம் இறைவனையே நாடியிருக்கும்வரை,
அவன் வாழ்க்கை கடலில் திசை தப்பிப் போவதில்லை.
— இராமகிருஷ்ண பரமஹம்சர் “
” மலர்களிலே மணம் இருப்பதுபோலவே ஆண்டவனும் உன்னிடமே இருக்கிறான்.
இதை அறியாமல்,
தன்னிடம் இருக்கும் கஸ்தூரியை உணராத மான்,
புல்லில் தேடுவது போல்
நீ ஏன் வெளியில் தேடுகிறாய்?”
— கபீர்தாஸ் .
“கடவுளை வணங்குதல் என்றால் என்ன?
தேங்காய் உடைப்பதா?
திருவிழா செய்வதா?
தட்சணை கொடுப்பதா?
கோவில் கட்டுவதா?
அல்ல, அல்ல
ஒழுக்கமாய் நடப்பது,
உயர்ந்த பண்புகள்கொள்வது
இதுவே உண்மையான கடவுள் வழிபாடு “.
— ஈ . வெ. ரா. பெரியார்