எல்லாவற்றையும் காலம் நினைவில் கொண்டுள்ளது.
காலம் வெற்றியடைந்தவன், தோல்வி பெற்றவன், பணம் படைத்தவன்,
பணம் இல்லாதவன் பண்டிதன், பாமரன், ஞானி,
அஞ்ஞானி என்ற பேதத்தை கைகொள்வதில்லை
அதனுடைய நினைவில் எல்லோருக்கும் இடம் உண்டு,
அதனால் காலத்தை வென்றவன்
காலத்தை வெல்லாதவன் என்ற பாகுபாடுகளை
நாம் பெரிதாய் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.
காலத்தில் கடந்த ,நிகழ், எதிர் காலங்கள் என்ற பிரிவுகள் கிடையாது
அது காலமாக மட்டுமே இருக்கிறது.
நாம் தான் காலத்தை மூன்று கூறாக்கி வைத்திருக்கிறோம்
எதையும் கூறு போடுவதே மனிதனின் செயல்
அந்த அவனது செயலில்
காலமும் தப்பவில்லை
ஆனால்
காலம் முழுமையாகத்தான் இருக்கிறது.