ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது ஆயிரமாயிரம் சூழ்ச்சிகள்,
குழிபறிப்புகள், துரோகங்கள் போன்ற எல்லாவற்றையும்
சமாளித்துதான் ஆட்சி செய்ய வேண்டியிருக்கிறது.
அந்த கால மன்னராட்சி முதல் இந்த கால மந்திரிகள் ஆட்சி வரை இந்த நியதி மாறவேயில்லை
அதிலும் அதிகாரம் கைபற்ற இத்தனை செய்யவேண்டியிருக்கிறது என்றால்
கிடைத்த அதிகாரத்தை தக்க வைக்க இதை போல் பல மடங்கு செய்ய வேண்டியிருக்கிறது.
அதிகார போதையில் மிதக்க ஆசைப்படுபவன்
எல்லோரையும் ஏமாற்றவே நினைக்கிறான்.
அதில் கடவுளும் அடக்கம்
ஏமாற்றியதற்கு கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்
எனும் எண்ணமே மேலும், மேலும் அவனை ஏமாற்றுபவனாக ஆக்குகிறது.