ஒருவன் தன்னுடைய உடலையோ, மனதையோ வெறுப்பதினால்
அவன் அடையும் பயன் ஒன்றே ஒன்று தான்
கடவுள் என்பவரின் நிழலைக் கூட காண முடியாது.
ஒருவன் தன்னை வெறுப்பதினால்
தன் மீது அன்பு செலுத்த இயலாதவனாகிவிடுகிறான்.
அதன் பின் அவனால்
பெற்றோர், ஆசிரியர், உடன் பிறந்தோர், நண்பர்கள்
போன்றவற்றில் எதிலும் அன்பு செய்ய இயலாதவனாகிவிடுகிறான்.
கடவுளை காண அன்பு மட்டுமே கருவியாக இருக்கும் போது
அந்த கருவி இல்லாதவனால் கடவுளை அறியமுடியுமா?