நம்முடைய மக்களிடம் உள்ள ஒரு விஷயம்
அதாவது ஆஸ்திகர்களிடம் அதிகமாய் உள்ளது என்னவென்றால்
தனக்கு இருக்கும் இறை நம்பிக்கையை
அலங்கார, ஆடம்பரத்தோடு காட்டி பகிரங்கப்படுத்திக் கொள்ளும்
பக்த சிகாமணிகளுக்கு அடி பணிந்து, அடிபணிந்து
அடிமையாய் இருக்க எத்தனை மக்கள்
நினைத்தாலே வியப்பாயும், ஆச்சர்யமாயும் இருக்கிறது.
பக்தி இவர்களுக்கு தெளிவை தருவதற்கு பதில்
மயக்கத்தை அல்லவா தந்திருக்கிறது.
அதனால் தானே
இறைவனை அறிய முடியாத
அடைய முடியாத நிலை ஏற்பட்டது.