அவள் விடுவாளா! மறுநாள், எக்ஸ்ட்ராவாக ஒரு சின்ன எவர் சில்வர் தூக்கில் எண்ணெய்
ஊற்றித் தந்தாள். ”வாக்கிங் போகும்போது துப்பும்படி ஆயிட்டா, இதை வாயில்
ஊத்திக்குங்க” என்றாள்.
தினமும் அவர் இப்படி எவர்சில்வர் தூக்கோடு நடந்து போவதை, அடுத்த தெருவில் உள்ள
ஒரு பெண்மணி கவனித்துவிட்டு, ”தினமும் எண்ணெய் கொண்டு போறீங்களே,
கோயிலுக்கா?” என்று கேட்டாள்.
அவளிடம், தான் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிப்பதை யெல்லாம் விளக்க
விரும்பாமல், ‘ஆமாம்’ என்று தலையாட்டி வைத்தார் நம்மாள்.
மறுநாள்… அந்தப் பெண்மணியின் கையில் ஒரு சொம்பு எண் ணெய். ”தயவுசெஞ்சு
இதையும் சேர்த்துக்கங்க” என்று எண்ணெயை அவரது எவர்சில்வர் தூக்கில் ஊற்றினாள்.
இதே போலவே அடுத் தடுத்த நாளில் நிறையப் பேர் காத்திருந்து, எடக்குமடக்கின் தூக்கில்
தங்கள் பங்காகக் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினார்கள்.
கோயிலுக்கு எண்ணெய் ஊற்றுவதை வேண்டாம் என்று சொல்ல மனமின்றி, அவரும்
தட்டாமல் வாங்கிக் கோயிலுக்கு அந்த எண்ணெயைக் கொடுத்து வந்தார்.
நிறைய எண்ணெய் கிடைத்ததால், தினமும் கோயிலில் ஏராளமாக விளக்கேற்றி வைத்தார்
குருக்கள். அதிகப்படியான எண்ணெயை விற்றுப் பிரசாதம் செய்து,
வருபவர்களுக்கு விநியோகித்தார்.
பூங்கா கோயில் மாலை வேளையில் தீப ஒளியில் பிரகாச ஆரம்பித்துகாணிக்கைகள்
ஏராளமாக வந்தன. கொஞ்ச நாளில் கோயில் புதுப்பிக்கப்பட்டுப் கும்பாபிஷேகமே நடந்தது.
எடக்கு மடக்குவிடம் அவர் மனைவி சொன்னாள்… ”அந்த சிவனுக்கு பவர் இல்லை; தன்
கோயிலையே அவரால் கட்டிக்க முடி யலே’னு சொன்னீங்களே…
இப்ப பார்த்தீங்களா, உங்களைக்கொண்டே அதை நிறைவேத்திக்கிட்டார் என்றாள்
இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது
எதை, எப்படி, எப்போது யாருக்குச் செய்ய வேண்டும் என்பதை
தெய்வத்துக்கு நாம் சொல்லித்தர வேண்டியதில்லை.
தனக்கே என்றாலும், வேண்டும் போது எவரை கொண்டு வேண்டுமானாலும்
தனக்கு வேண்டியதை செய்துகொள்ளும் அதனால் தானே அது பிரபஞ்ச சக்தி