ஓடும் போது
அதுவும் எல்லைகளை நிர்ணயித்து ஒடும்போது
அந்த ஓட்டத்தில் எல்லையை அடையும் போது
மனம் அடையும் நிலை,
சந்தோஷம், திருப்தி என்பதைவிட
வெற்றி என்ற இறுமாப்புதான் இருக்கும்
அது
நாம் அடைந்த எல்லையை
மீண்டும் விஸ்தாரப்படுத்தி
மீண்டும் நம்மை ஓட வைக்கும்
அந்த ஓட்டத்திலும்
எல்லைகளிலுமே மூழ்கியிருக்கும் மனிதனால்,
மனதினால்
தன்னைப் உற்று பார்க்கவோ,
தனக்குள் செல்லவோ தோணாது
அப்படி செய்து பார் என்று
சொல்லுபவர்களையும் அலட்சியப்படுத்தும்
ஏளனமாய் கிண்டல் செய்யும்
எல்லை கோடுகளை வகுத்து
அதை அடைவதே முன்னேற்றம்
அது மட்டுமே வாழ்க்கை என்று போதிக்கும்