மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே.
நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு.
பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.
இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர் சொல்கிறார்கள்.
ஆனால் நான் சொல்கிறேன்
முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை அதுதான் வழி.
உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை.
எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன
அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து.
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்.
நீ உறுதியுடன் விஷத்தைப்பொருட்படுத்தாதிருந்தால்,
பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.