ஓரளவுக்குத் தவறான அபிப்பிராயமும் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவிவருகிறது.
அன்னிய நாட்டில் இருந்தவரை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அமைதி காத்தேன் .
ஆனால் இப்போது, என் தாய்நாட்டு மண்ணின்மீது நின்று கொண்டு சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன்
இதன் விளைவு என்ன என்பதைப்பற்றி நான் கவலைபடவில்லை.
அந்தச் சொற்கள் உங்களிடம் எத்தகைய உணர்ச்சியை எழுப்பும் என்பதையும் நான் பொருட்படுத்தவில்லை;
அது எனக்கு ஒரு பிரமாதமான விஷயமல்ல ; ஏனெனில் நான் ஒரு துறவி.
ஒரு தடியோடும் கமண்டலத்தோடும் நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்குள் நுழைந்த அதே சன்னியாசியாகவே
நான் இப்போதும் இருக்கிறேன்.
விரிந்து பரந்த உலகம் என் முன் இருக்கவே செய்கிறது.
முன்னுரையை மேலும் நீட்டாமல் விஷயத்திற்கு வருகிறேன்.