அந்தச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வழியில் தான் இருவரும் வேறுபடுகிறோம்.
அவர்களுடையது அழிவுப்பாதை;
என்னுடையது ஆக்கப் பாதை.
நான் மறுமலர்ச்சியை நம்பவில்லை, வளர்ச்சியையே நம்புகிறேன்.
என்னைக் கடவுள்நிலையில் வைத்துக்கொண்டு,
இந்த வழியில் தான் நீங்கள் போக வேண்டும்,
இந்த வழியில் போகக் கூடாது என்று சமுதாயத்திற்குக் கட்டளையிட நான் துணிய மாட்டேன்.
ராமர் பாலம் கட்டும்போது, தன் பங்காக ஏதோ கொஞ்சம் மணலைப் போட்ட
அந்தச் சிறிய அணிலைப்போல் இருக்கவே நான் விரும்புகிறேன்.
அதுதான் என் நிலை.