ஒரு பிராமண சன்னியாசி தன் வீட்டிற்க்கு வந்து வீட்டைச் சுத்தம் செய்வதை
அவன் எப்படி அனுமதிப்பான் ?
எனவே இந்த மனிதர் நள்ளிரவில் விழித்தெழுந்து, யாருமறியாமல்
அவனது வீட்டிற்குள் நுழைந்து கழிவறைகளைச் சுத்தம் செய்து, தம் நீண்ட தலைமுடியால்
அந்த இடத்தைத் துடைக்கவும் செய்வார்.
எல்லோருக்கும் சேவகனாகத் தம்மை ஆக்கிக்கொள்வதற்காகப்
பல நாட்கள் இவ்வாறு செய்தார்.
அவரது திருப்பாதங்களை என் தலைமீது தாங்கிக் கொண்டிருக்கிறேன்.
அவரே என் தலைவர்,
அவரது வாழ்க்கையைப் பின்பற்றவே நான் முயல்வேன்.