அவர் இந்தியாவிலுள்ள சீர்திருத்தக் கட்சி ஒன்றின் தலைவர்
ஏசு இந்தியாவிற்கு வந்திருக்கிறார் என்று அவர் ஒவ்வொரு நாளும் முழங்குகிறார்.
ஏசு இந்தியாவிற்கு வரும் வழி இதுதானா? இதுதான் இந்தியாவைச் சீர்திருத்துகின்ற வழியா?
இளமைப் பருவத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும்.
என் சிறந்த நண்பர்களுள் ஒருவராக இருந்தவர்.
அன்னிய நாட்டில் நெடுநாட்களாக நம் நாட்டினர் யாரையும் காணாமலிருந்து அவரைக் கண்டபோது மிகவும் மகிழ்ந்தேன்.
ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த பரிசு இது.
என்னை என்று சர்வசமயப் பேரவை ஆரவாரம் செய்து வரவேற்றதோ, என்று நான் சிகாகோவில் பிரபலம் ஆனேனோ
அன்றிலிருந்து அவரது போக்கு மாறிவிட்டது
என்னைத் துன்புறுத்துவதற்குத் தன்னால் இயன்ற அனைத்தையும் திரைமறைவில்.செய்தார்
இந்த வழியாகத்தான் ஏசு இந்தியாவிற்கு வரப் போகிறாரா?
கிறிஸ்தவின் காலடியில் இருப்பதைந்து ஆண்டுகள் உட்கார்ந்து அவர் கற்றுக்கொண்ட பாடம் இதுதானா?
கிறிஸ்தவ மதமும் கிறிஸ்தவ சக்தியும்தான்
இந்திய மக்களைக் கைதூக்கிவிடப் போகிறது என்று
நமது மகத்தான சீர்திருத்தவாதிகள் முழங்குகிறார்கள்,
அதைச் செய்கின்ற வழி இதுதானா?
அவர் தான் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றால்
அது நம்பிக்கைக்குரிய ஒன்றாகத் தோன்றவில்லை.