சர்வசமயப் பேரவை கூடுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே
நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். பணம் மிகக் குறைவாகத்தான் என்னிடம் இருந்தது,
அதுவும் விரைவில் செலவாகிவிட்டது.
குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது,
என்னிடமோ வெயில் காலத்திற்குரிய மெல்லிய ஆடைகளே இருந்தன.
உறையச் செய்கின்ற அந்தக் குளிரில் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை.
தெருக்களில் பிச்சையெடுத்தாலோ சிறையில்தான் இடம் கிடைக்கும்.
சில டாலர்களைத் தவிர எல்லாம் கரைந்துவிட்டன.
சென்னை நண்பர்களுக்குத் தந்தி கொடுத்தேன்.
என் நிலை தியாசபிக் சொசைட்டியினருக்குத் தெரியவந்தது.
அவர்களுள் ஒருவர் எழுதினார்-அந்தப் பிசாசு ஒழியப் போகிறது.
நமக்கு இறைவன் அருள்புரிந்துவிட்டார்,
இதுதான் எனக்குப் பாதை அமைத்துத் தருவதா?