9 பிப்ரவரி 1897 அன்று மாலை விக்டோரியா ஹாலில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.
கூட்ட மிகுதியால் அன்று நம்மால் சொற்பொழிவைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.
எனவே சென்னை மக்கள் எனக்கு அளித்த அன்புமயமான வரவேற்புக்கு இப்போது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த வரவேற்புரையில் அழகிய சொற்கள் பல கூறப்பட்டன.
மனம்திறந்து பாராட்டப்பட்ட அந்தக் கனிவான சொற்களுக்குத் தகுதியானவனாக என்னை ஆக்குமாறு
எம்பெருமானைப் பிரார்த்திப்பதையும், நமது மதத்திற்காகவும்
நமது தாய்நாட்டின் சேவைக்காகவும் என் வாழ்நாள் முழுவதம் பாடுபடுவதையும் தவிர
வேறு எப்படி என் நன்றியுணர்வைத் தெரிவிப்பது என்பது எனக்குத் தெரியவில்லை.
அந்தப் பாராட்டுரைகளுக்கு தகுதி படைத்தவனாக இறைவன் என்னை ஆக்குவாராக!