ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்: சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை. நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement. அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார். அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத முடியவில்லை காரும் பயங்கர சேதாரம். என்ன ஒரு மோசமான வருடம்,,, என்று வருத்தத்துடன் எழுதி முடித்தார். அவருடைய மனைவி அப்போதுதான் உள்ளே வந்தார். கணவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து பின்னால் இருந்து அவர் எழுதியதை படித்தார். பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு பேப்பரில் எதையோ எழுதி, கொண்டு வந்து, கணவர் எழுதிய பேப்பருக்கு அருகில் வைத்தார். சென்ற வருடம் gall bladder operation.நீண்ட நாட்களாக இருந்த வலியிலிருந்து விடுதலை பெற்றேன். 60 வயது ஆனதால் வேலையிலிருந்து ரிடையர்மெண்ட். இனி என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடுவேன். என் அப்பா 95 வயதில் யாருக்கும் இனியும் பாரம் வேண்டாம் என்று அமைதியாக இறைவனிடத்தில் தஞ்சம் புகுந்தார். அதே வருடம் என் மகன் கடவுள் கருணையால் மீண்டும் புது வாழ்வு கிடைத்தது. என்னுடைய கார் சேதாரமானாலும் என் மகன் எந்த குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான் இந்த வருடம் எனக்கு நல்ல வருடம். கடவுள் என் மீது தன் கருணையை பொழிந்தார். படித்த கணவர் நன்றி பெருக்கால் தன் மனைவியை அணைத்துக் கொண்டார். ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது நமது கையில்தான் உள்ளது. Category: பல்சுவை கதம்பம்By admin@powerathmaOctober 1, 20205 CommentsTags: divine power athmalifePOSSITIVE THINKINGவாழ்க்கை Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஓதி மலை முருகன் கோவில்NextNext post:இந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள்.Related Postsஉலக பூமி நாள் 3April 18, 2025உலக பூமி நாள் 2April 17, 2025உலக பூமி நாள் ” 1April 16, 2025புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 8March 19, 2025புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 7March 18, 2025புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 6March 17, 2025
வணக்கம் திரு.வெங்கடேஷ் அண்ணா நடந்த விசயம் ஒன்று தான் ஆனால், அதை பக்குவமாக பார்பதற்கு என்ன செய்ய வேண்டும் ? நீங்கள் கூறியது போல ஒரு விசயத்தை பாசிட்டிவாக அணுக என்ன செய்ய வேண்டும் ??? Reply
Pasitive thinking useful for life
இதற்குப்பெயர் தான் positive approach
வணக்கம்
திரு.வெங்கடேஷ் அண்ணா
நடந்த விசயம் ஒன்று தான் ஆனால்,
அதை பக்குவமாக பார்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?
நீங்கள் கூறியது போல
ஒரு விசயத்தை
பாசிட்டிவாக அணுக என்ன செய்ய வேண்டும் ???
நமது கண்ணோட்டம் நமக்கு நன்மை யாகவும் மகிழ்ச்சியை நல்கு வதாகவும் இருக்க வேண்டும்
நமது கண்ணோட்டம் நமக்கு நன்மை யாகவும் மகிழ்ச்சியை நல்கு வதாகவும் இருக்க வேண்டும்