ஒருவர் எதையாவது சாதிக்க வேண்டுமென்றால் ஒன்று
அவர்களுக்கு பிறவியிலிருந்து திறமை இருக்க வேண்டும்,
இல்லையென்றால் யாராவது சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்..
பயிற்சியானால் செயல்களை கற்றுத் தெரிந்து கொள்ளலாம். .
இதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன்,
ஒரு தாய் தன் இருபிள்கைளிடம் இறைவனிடம் ஒரு வேண்டுதல் வைத்துள்ளேன்
அது நிறைவேறினால் பத்தாயிரம் அரிசி காணிக்கை தருவதாக
வேண்டியுள்ளேன் என்றாள். அதற்கு மகன்கள் பத்தாயிரம்
அரிசியா எப்படியம்மா எண்ணி கொடுக்கமுடியும் என்றனர்.
சிறிது நேரம் கழித்து பெரியவன் சொன்னான் சீக்கிரம் எண்ணி
விடலாம். முதலில் ஐநூறு அரிசியை எண்ணி அதை தாரசில்
இட்டு சரிசமமாக அரிசியைப்போட்டால் விரைவில் எண்ணி விடலாம் என்றான். .
அம்மா சிரித்து விட்டு சொன்னார், மகனே இப்படி எடை
பார்த்து காணிக்கை செலுத்தினால் நமது கவனமெல்லாம்
அதில்தான் இருக்கும். கடவுளிடம் இருக்காது. அதற்குப் பதிலாக
கடவுள் பெயரை உச்சரித்து ஒவ்வொரு அரிசியா படைக்கும்
போது பத்தாயிரம் முறை பகவான் நாமத்தை உச்சரித்த தியான
பயன் கிடைக்கும் என்றார்.
காணிக்கை செலுத்துவது, கடவுளை திருப்தி படுத்த அல்ல. நம்மைப் பக்குவப்படுத்த , .
இந்த சிந்தனை எல்லோருக்குமே பயன்படும் அல்லவா?.