மெச்யூரிட்டி என்பது வயதால் மட்டும் வருவதன்று.
ஒருவருக்கு வயதாவதால் மட்டுமே
அவர் முதிர்ச்சி அடைவதில்லை
மாறாக
அவர் அன்றாட வாழ்வில் எத்தனை
பேரைக் கடந்து வந்திருக்கிறார்
அத்தனை பேரும் மற்றும் அவர்களுடைய வாழ்வும்
எண்ணங்களும் சிந்தனைகளும்
இவரது எண்ணங்களிலும் சிந்தனையிலும்
என்னென்ன மாற்றங்களைச் செய்தன
என்பதில் தான் மெச்யூரிட்டி வருகிறது.