எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம்.
காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை.
ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால்
அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம்
அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.
எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ,
அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.