தற்கால இளைஞர்களுக்கு தன் உள் மன சுத்தம் பற்றி தெரிவதில்லை.
தமக்குள் காமம் புகுந்து தன்னை வாட்டி வதைப்பதை அவர்கள் உணர்ந்தாலும்
அதை வெளியே சொல்லி தீர்வு தேட முயலுவதில்லை அல்லது முடியவில்லை.
காமத்தை பற்றி சிந்திக்காமல் முழுவதுமாக மற்ற வேலைகளில் ஈடுபடுகின்ற வாழ்க்கை
பலருக்கு வாய்ப்பதில்லை.
ஒயாமல் வேலை செய்வதென்பது இவர்களுக்கு தெரிவதில்லை.
அப்படி வேலை செய்யும் போது காமத்தை பற்றிய நினைவே வராது என்ற உண்மை புரியவில்லை
ஓயாமல் வேலை செய்வது மட்டுமே
உள் மனம் சுத்தமாக இருக்க உள்ள ஒரே வழி
வேலை அற்ற உடலும் நல்ல சிந்தனை இல்லாத மனமும்
நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும் உபகரணங்கள்
ஓயாமல் வேலை செய்தால் மனம் சுத்தம் ஆகும் என்ற உண்மை இத்தனை நாள் புரியவில்லை.ஏனென்றால் மனம் ஒன்றி வேலை செய்தால் வேறு எண்ணங்கள் மனதில் தோன்ற வாய்ப்பில்லை
I have understood that by keeping mentally busy in our duty,we wil not have negative thoughts go in our mind…so our soul and mind will be clean. Thank you Ayya for this messages helped me to get up..