ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள்.
அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.
குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?” என்று கேட்டான்.
குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை… நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு
கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது?
அலுப்புத் தட்டுகிறது போ!” என்று கொட்டாவி விட்டான்.
அதற்கு வைர வியாபாரி சொன்னான் “உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி.
நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து
ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு?
உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே.
வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம்.
இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்.
என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.
எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா?
மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள்.
அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.