இந்த உலகம் பிரம்மாண்டமானது என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல்
நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நாம் பிரம்மாண்டமானவர் என்றால் சந்தேகமும்,
அவநம்பிக்கையும் கூடவே எப்படி என்ற கேள்வியும் வருகிறதே,
யோசித்துப் பார்த்தால் நாம் பிறந்து, இறக்கும் வரை உள்ள அனுபவத் தொகுதிகள்,
அறிவு விஷயங்கள் அனைத்தும் பிரம்மாண்டமில்லையா?,
எந்த சிந்தனையும், எதுவுமே தெரியாத நிலையில் பிறந்து,
அவரவர் நிலைக்கு இந்த அளவு வந்திருக்கிறோமே என்பது பிரம்மாண்டமல்லவா.
சரியாக சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையின் தொடர்ச்சி என்பது எத்தனை பிரம்மாண்டம்.
எங்கு ஆரம்பித்தது என்றும் தெரிவதில்லை, எப்படி முடியும்
என்றும் தெரிவதில்லை. கண்ணதாசன் தனது பாடலில் சொல்லியது போல —
எங்கே வாழ்கை தொடங்கும் – அது
எங்கே எப்படி முடியும் –
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
வருவதும் போவதும் தெரியாது
நீள்வட்டப்பாதையான வாழ்க்கையோட்டத்தில் நாம் தூசு போல பயணித்தாலும்,
நாமும் பிரம்மாண்டமே, நம்மைப் பற்றி நாம் அறியாதவரை, உணராதவரை,
அறிந்து கொண்டால் தூசு போல் தான் நாமும்
அதாவது எல்லா பிரம்மாண்டங்களும் தூசே.