மற்ற நாடுகளின் முன்னேற்றத்தின் முன்பு
இந்தியாவின் முன்னேற்றம்
ஒளி மங்கிக்காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா ?
இந்தியஅன்னை
அறிவாற்றலில் குறைந்தவளா ?
அல்லது திறமையில் தான் குறைந்தவளா ?
அவளுடைய கலை, கணித அறிவு, தத்துவங்கள் ஆகிய இவற்றை பார்.
பிறகு
அறிவாற்றலில் இந்தியஅன்னை குறைந்தவள் என்று நீ சொல்ல முடியுமா ?
அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு
தனது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும்.
இந்த ஒன்றுதான்
உலக நாடுகளின் முன்னணியில் தனக்கு உரிய உயர்ந்த இடத்தை
அவள் திரும்பப் பெறுவதற்குத் தேவையாகும்..
துறவும் தொண்டுமே இந்தியாவின் இலட்சியங்கள்.
இந்த பாதையிலேயே மேலும் மேலும் அவளை ஈடுபடுத்துங்கள்.
மற்றவை தாமாக வந்துசேரும்.
நமக்கு தந்த விஷயங்கள் இப்படி இருக்க
நாம் இப்போது செய்துகொண்டு இருப்பது
இந்தியாவின் அடையாளமாகிய
துறவையும்
தொண்டையும்
மறந்தும் விட்டோம்
மறுத்தும் விட்டோம்
முன்னேற்றம் என்ற பெயரிலும்
வளர்ச்சி என்ற பெயரிலும்
எல்லாம் நித்தியமாய்
எதிலிருந்து கிடைக்குமோ
அதை நாமே அழித்துவிட்டு
நாம் வளர்ச்சி அடைந்துவிட்டதாக
நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருக்கிறோம்
இந்த உண்மை தற்போதைய சந்ததியினர்
அறிந்துகொள்ள வாய்ப்பே இல்லாத நிலையில்
நம்முடைய கல்வியையும் பழக்க வழக்கங்களையும்
கொண்டவர்கள் ஆகிவிட்டோம்
என்ன செய்வது
இப்படியெல்லாம் நாம் இருந்தாலும்
இந்தியா காப்பாற்றப்படும்
ஏனென்றால்
இந்தியா
ரிஷிகளாலும், சித்தர்களாலும்
வேதத்தாலும் கட்டமைக்கபட்டது